அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள பரம்பூர் சீகம்பட்டி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). பல்காரரான இவர், சைக்கிளில் வீட்டில் இருந்து அப்பகுதியில் பால் ஊற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வருவதற்தாக புதுக்கோட்டை-கொடுபாலூர் சாலையில் சீகம்பட்டி விளக்கு அருகே வந்து திரும்பியபோது, அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஆறுமுகம் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஆறுமுகம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த கன்னியாப்பட்டி நாகராஜன் (34) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.