கடைக்கோடி மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டும்
வேளாண் பட்டம் பெற்ற மாணவர்கள் கடைக்கோடி மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று பட்டமளிப்பு விழாவில் குன்றக்குடி அடிகளார் பேசினார்.
காரைக்குடி,
வேளாண் பட்டம் பெற்ற மாணவர்கள் கடைக்கோடி மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டும் என்று பட்டமளிப்பு விழாவில் குன்றக்குடி அடிகளார் பேசினார்.
பட்டமளிப்பு விழா
நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா பேரூரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடைக்கோடி மக்கள்
உழவைப் பாடிய தமிழ் புலவர் திருவள்ளுவர், விவசாயமே இவ்வுலகத்தின் அச்சாணி, .விவசாயிகள் தான் இந்த உலகத்தையே இயக்கி கொண்டிருக்கின்றனர் என்று கூறினார். மனிதகுலம் தனது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள ஒற்றை திறவுகோல் கற்பதும் அதன்வழி நிற்பதுமேயாகும். தாங்கள் கற்ற கல்வி சமூகத்திற்கு பயன்படத்தக்க வகையில் அமைய வேண்டும். விவசாயத்தில் பட்டம் பெற்ற நீங்கள் அதனை பதவிகளுக்காக மட்டும் பயன்படுத்தாமல் கடைக்கோடி மக்களின் வாழ்க்கையினை மீட்டெடுக்கும் கருவியாகவும் பயன்படுத்த வேண்டும்.
நாம் பெற்ற கல்வி உலகிற்குப் பயன்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில மராட்டிய மாநிலம் நாசிக்கில் உள்ள ஹயாத்ரி உழவர்கள் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் தலைவர் விலாஸ் விஷ்ணு ஷிண்டே, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சாம் வேளாண் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஜி.வி.கே. நாயுடு, சென்னை ஆர்ச் சிட்டி தலைவர் டாக்டர் புவனா ராஜேஸ்வரன், யுனைடெட் அரபு எமிரேட்ஸ் ஷார்ஜாவில் உள்ள பிளாக் துலிப் மலர்கள் அமைப்பின் தலைவர் முகமது எகியா, கடற்படை அதிகாரி ராஜா நாகேந்திரன், கல்லூரி இயக்குனர் கோபால் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.