தேர்தல் பணி: மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கிருஷ்ணகிரி வந்தனர்
தேர்தல் பணி: (கி) மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கிருஷ்ணகிரி வந்தனர்
கிருஷ்ணகிரி:
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் இருந்த தமிழக முன்னாள், இன்னாள் முதல்-அமைச்சரின் படங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அரசு வாகனங்களும் தேர்தல் பணிக்காக திரும்ப பெறப்பட்டது. நேற்று முதல் அரசியல் கட்சி கொடி கம்பங்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டது. சுவர் விளம்பரங்களை அழிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 92 வீரர்கள் கிருஷ்ணகிரிக்கு வந்தனர். கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் தங்கி உள்ள அவர்களுக்கு விரைவில் பணிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.