கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் கலியபெருமாள், ஆலோசகர் அண்ணாமலை, பிரசார செயலாளர் கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் தேவராஜ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கிராம உதவியாளர்கள் 4-ம் நிலைக்கு இணையான டி-கிரேடு ஊதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாநில துணை பொதுச் செயலாளர் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் முகமது காசிம், செயற்குழு உறுப்பினர் கணபதி, ஒருங்கிணைந்த கள்ளக்குறிச்சி-விழுப்புரம் மாவட்ட அமைப்பு செயலாளர் தண்டபாணி, மாவட்ட மகளிரணி தலைவர் வள்ளி, மகளிர் அணி பொருளாளர் அனுசுயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.