தனித்தனி விபத்தில் 3 பேர் பலி

தனித்தனி விபத்தில் 3 பேர் பலியானாா்கள்.

Update: 2021-02-27 17:57 GMT
விழுப்புரம், 

செஞ்சி ராஜேந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 65). இவர் தனது காரில் திருவெண்ணெய்நல்லூரில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக சென்று கொண்டிருந்தார். திருப்பச்சாவடிமேடு பகுதியில் சென்றபோது ஜெயபாலின் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலைதடுமாறி அருகில் இருந்த வேப்ப மரத்தில் மோதியது. இதில் ஜெயபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம் அருகே உள்ள சின்னகொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் விஷ்ணு (27). இவர் மோட்டார் சைக்கிளில் தேவபாண்டலத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்துகொண்டிருந்தார். மூக்கனூர் பிரிவு சாலை அருகே வந்தபோது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
கண்டாச்சிபுரம் தாலுகா ஏமப்பேர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (50). இவர், விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடந்து சென்றார். அப்போது மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்