ஆவத்துவாடி கிராமத்தில் செல்லியம்மன் கோவில் விழா பக்தர்கள் மீது நடந்து பூசாரி அருளாசி வழங்கினார்

ஆவத்துவாடி கிராமத்தில் செல்லியம்மன் கோவில் விழா பக்தர்கள் மீது நடந்து பூசாரி அருளாசி வழங்கினார்

Update: 2021-02-27 17:51 GMT
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் ஆவத்துவாடி கிராமத்தில் திரவுபதி அம்மன், செல்லியம்மன், காளியம்மன், மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி மற்றும் பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து கோவில் பூசாரி தலையில் பூங்கரகம் சுமந்தபடி மேளதாளங்கள், முழங்க வந்தார். அப்போது பக்தர்கள் ஈர துணியுடன் தரையில் படுத்திருந்தனர். பூசாரி பக்தர்கள் மீது நடந்தபடி சென்று அருளாசி வழங்கினார். 
தொடர்ந்து கோவிலின் முன்புறம் காவல் காத்து வரும் குதிரை சிலைக்கு நவதானிய உணவு சமைத்து ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. இரவு வாண வேடிக்கையுடன் செல்லியம்மன் தலைக்கரகம் கூடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்