நள்ளிரவில் நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்தது
காவேரிப்பாக்கம் அருகே நள்ளிரவில் நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்தது.
காவேரிப்பாக்கம்
காவேரிப்பாக்கம் அருகே நள்ளிரவில் நடுரோட்டில் லாரி தீப்பிடித்து எரிந்தது.
ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியிலிருந்து பெங்களூருவுக்கு சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டது. லாரிைய திருச்சியைச் சேர்ந்த டிரைவர் சதீஷ் குமார் ஓட்டி வந்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் அருகே நேற்று நள்ளிரவில் வந்தபோது திடீரென லாரியின் முன் பகுதியில் உள்ள ரேடியேட்டர் பகுதியில் இருந்து புகை வந்தது.
உடனடியாக லாரியை டிரைவர் நிறுத்தி கீழே இறங்கி வந்து பார்த்தார். லாரி என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ வேகமாக பற்றி எரிந்தது. அப்போது லாரியில் இருந்த கண்ணாடிகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
தகவல் அறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் அதற்குள் லாரி முழுமையாக எரிந்து சேதமானது. லாரியில் இருந்து வந்த புகையினால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர் எங்கும் புகை மண்டலமாக காட்சி அளித்தது
இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக காவேரிப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.