யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி திறப்பு
யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி திறக்கப்பட்டது
ராமேசுவரம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.31 கோடியில் பேருந்து நிலையம் எதிரே கோவிலுக்கு சொந்தமான இடத்தில் யாத்ரி நிவாஸ் என்ற தங்கும் விடுதி கட்டும் பணி நிறைவடைந்தது.
இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து திருக்கோவில் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதுபற்றி திருக்கோவில் அதிகாரிகள் கூறியதாவது:- யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில் மொத்தம் 136 அறைகள் உள்ளன. இதுதவிர 100-க்கும் அதிகமான வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தும் இடமும், 10-க்கும் மேற்பட்ட கடையுடன் வணிக வளாக வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் யாத்ரி நிவாஸ் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.