பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடுபோனது;

Update: 2021-02-27 16:41 GMT
ஆர்.எஸ்.மங்கலம், 
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் தெய்வம்மாள் தெருவில் வசித்து வருபவர் மாரிமுத்து (வயது 63). இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்று உள்ளார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருடுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்