மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி

மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்;

Update: 2021-02-27 15:08 GMT
சாயல்குடி,
சாயல்குடி அருகே எஸ்.எம். இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது55). விவசாயியான இவர் மோட்டார் சைக்கிளில் சாயல்குடி- தூத்துக்குடி சாலையில் சென்றபோது நரிப்பையூர் பகுதியில் இருந்து சாயல்குடி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. 
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக கடலாடி அரசு மருத்துவ மனைக்கு  கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிழந்தார். இதுகுறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்