மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலி
மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள இடையர்வலசையை சேர்ந்தவர் சேது என்பவரின் மகன் முருகேசன் (வயது60). இவர் காவனூரில் உள்ள சரக்கு வாகனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் ராமநாதபுரம் நோக்கி வந்துள்ளார்.
அப்போது இடையர்வலசை பஸ்நிறுத்தம் அருகில் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி தூக்கி வீசப்பட்டார். இதனை அந்த வழியாக கண்ட அவரின் மகன் ஜெகதீஷ் (27) என்பவர் கண்டு அதிர்ச்சி அடைந்து வேகமாக ஓடிச்சென்று தந்தையை தூக்கி உள்ளார். பின்னர் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஜெகதீஷ் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசன் மீது மோதிவிட்டு நிற்காமல் மோட்டார் சைக்கிளில் சென்றவரை தேடிவருகின்றனர்.