திருச்செந்தூர் கோவிலில் ஆச்சார்ய உற்சவம்
திருச்செந்தூர் கோவிலில் ஆச்சார்ய உற்சவம் நடந்தது.;
திருச்செந்தூர், பிப்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 17-ந் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா காலங்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டத்தை தொடர்ந்து, திருவிழா கொடியேற்றிய பட்டருக்கு மரியாதை செய்யும் ஆச்சார்ய உற்சவம் நடந்தது. கோவில் நிர்வாகம் சார்பில், காப்பு கட்டிய சந்தோஷ் குமார் பட்டருக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அவரை யானை மேல் அமரவைத்து சிவாச்சாரியார் சபைக்கு அழைத்து வரப்பட்டார். நிகழ்ச்சியில், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் மாரிமுத்து, கோவில் மணியம் காவடி சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.