கடையநல்லூரில் லோடு ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்தம்

கடையநல்லூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து லோடு ஆட்டோ டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-26 22:58 GMT
அச்சன்புதூர்:
கடையநல்லூரில் டீசல், இன்சுரன்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ் விலை உயர்வு மற்றும் பெட்ரோல், சமையல் கியாஸ் ஆகியவை மத்திய, மாநில அரசுகள் உயர்த்தியதை கண்டித்து லோடு ஆட்டோ டிரைவர்கள் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதில் கடையநல்லூரில் உள்ள அனைத்து லோடு ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட லோடு ஆட்டோக்கள் அட்டைகுளம் அருகே வரிசையாக நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்