சேலத்தில் பஸ் கண்ணாடியை உடைத்த ரவுடி கைது
சேலத்தில் பஸ் கண்ணாடியை உடைத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:
சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் இம்ரான் (வயது 30). ரவுடியான இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழிப்பறி வழக்கில் அம்மாபேட்டை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். சம்பவத்தன்று சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த அவர் பொன்னம்மாபேட்டை கடைவீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சின் கண்ணாடியை உடைத்து விட்டு தலைமறைவாகி விட்டார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த இம்ரானை போலீசார் கைது செய்தனர்.