சேலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-26 21:22 GMT
சேலம்:
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை முறையாக நடத்த வில்லை என்று கூறி போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி நேற்று சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மெய்யனூர் பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மெய்யனூர் கிளை செயலாளர் மனோகர் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை அரசு முறையாக நடத்தாமல் காலம் தாழ்த்தி தொழிலாளர்களை ஏமாற்றி உள்ளது. எனவே போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர்.

மேலும் செய்திகள்