அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

அண்ணனை கத்தியால் குத்திய தம்பி கைது

Update: 2021-02-26 21:21 GMT
கே.கே.நகர், பிப்.27-
திருச்சி மேல பஞ்சப்பூர், மணல்மேடு பகுதியை சேர்ந்த சேகர்-காத்தம்மாள் தம்பதியின் மகன்கள் மாரிமுத்து (வயது 27), கார்த்திகேயன் (26). சம்பவத்தன்று அண்ணன்-தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன், தனது அண்ணன் மாரிமுத்துவை கத்தியால் குத்தினார். அதை தடுக்க சென்ற தாய் மற்றும் பாட்டியை கத்தியால் கீறினார். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திகேயனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்