டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது; 6 பேர் காயம்

டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது; 6 பேர் காயம்

Update: 2021-02-26 20:51 GMT
புதூர்
மதுரை அருகே உள்ள சத்திரப்பட்டி, வெளிச்சநத்தம், சீகும்பட்டி பகுதிகளிலிருந்து சமயநல்லூர் உள்ள தனியார் மில்லுக்கு பெண்கள் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில் ஒரு வேனில் 10-க்கும் மேற்பட்டவர்கள்  நேற்று மில்லுக்கு புறப்பட்டனர். இந்த வேன் வெளிச்சநத்தம் அருகே வரும்போது திடீரென்று டயர் வெடித்தது. இதில் நிலைதடுமாறிய வேன் அருகில் இருந்த கண்மாய் கரையில் கவிழ்ந்தது. இதனால் வேனில் இருந்த பெண்கள் அலறினர். அப்போது அந்த வழியாக வந்த தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி மற்றும் தி.மு.க.வினர் உடனடியாக வேனில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர். வேன் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்