கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாமன்னர் அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று காலை திடீரென வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரியில் படிக்கும் 2-ம், 3-ம் ஆண்டு மாணவர்கள் ஏற்கனவே 4-ம் பருவ நிலுவை தேர்விற்கான கட்டணத்தை செலுத்திய நிலையில் மீண்டும் கட்டணத்தை செலுத்துமாறும் கல்லூரி நிர்வாகம் கூறுவதாகவும் இதனை கண்டித்தும், அரியர் தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய கோரியும், கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரியும் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரப்பானது. கல்லூரி தரப்பில் இருந்து பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர்.