வாங்கல் சுகாதார நிலையத்தில் அதிகாரி ஆய்வு

வாங்கல் சுகாதார நிலையத்தில் அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2021-02-26 19:51 GMT
நொய்யல்
வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநில சுகாதார துறை இணைச் செயலாளர் டாக்டர் நடராஜன் தலைமையில், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சந்தோஷ்குமார், மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, கொரோனா வைரஸ் தொற்று குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மேலும் இப்பகுதியில் நடத்த கொரோனா முகாம் மற்றும் பல்வேறு செயல்பாடுகள் குறித்த கோப்புகளை பார்வையிட்டனர். அப்போது வாங்கல் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியங்கா உடனிருந்தார்.

மேலும் செய்திகள்