விஷமாத்திரை தின்று தற்கொலை

விஷமாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-02-26 19:48 GMT
க.பரமத்தி
சின்னதாராபுரம் அருகே கருப்பண்ண கவுண்டன்புதூரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 75). இவருக்கு கடந்த 15 ஆண்டுகளாக மூட்டு வலி மற்றும் பல்வேறு உபாதைகள் இருந்து வந்துள்ளது. இதற்கு மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மூட்டு வலி அதிகமானதால் விஷ மாத்திரையை தின்று உள்ளார். இதனால் அலறித் துடித்த கருப்புசாமியை அங்குள்ளவர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் கரூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்