தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
நொய்யல்
தொழில் அதிபர்
கரூர் அண்ணாநகர் சேரன் ஹவுஸ் இல்லம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 58). தொழில் அதிபர் இவருக்கு, கூட்டு நிலத்தை வாங்கியதில் பிரச்சினை ஏற்பட்டு, கடன் சுமை அதிகரித்துள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்திரசேகர் நேற்று காலை புன்னம் சத்திரம் அருகே உள்ள அவருக்கு சொந்தமான கார்டன் ேதாட்டத்து வீட்டிற்கு சென்றார்.
பின்னர் தனது மனைவி விஜயலெட்சுமிக்கு (53) செல்போனில் தொடர்பு கொண்டு நான் தற்கொலை செய்யபோவதாக கூறினார். இதனால் பதற்றம் அடைந்த மனைவி தனது மகனுடன் கார் மூலம் தோட்டத்து வீட்டிற்கு வந்தார். அதற்குள் சந்திரசேகர் தூக்கில் தொங்கினார்.
போலீசார் விசாரணை
பின்னர் சந்திரசேகரை மீட்டு ஆம்புலன்சு மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சந்திரசேகரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து சந்திரசேகர் மகன் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும், சந்திரசேகர் தனது கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.