சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் வெண்ணைமலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர்
கரூர் மாவட்ட சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் வெண்ணைமலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்டுமான சங்க மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் குமார் கலந்து கொண்டு பேசினார். இதில், மாவட்ட செயலாளர் ராஜா முகமது, பொருளாளர் ராகுல் காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். உயர்த்தப்பட்ட பணப்பயன்களுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடவேண்டும், இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சமும், பணியிடங்களுக்கு வெளியில் நடைபெறும் விபத்து மரணத்திற்கு ரூ.4 லட்சமும் வழங்க வேண்டும என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகயை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.