போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வளர்த்த ஜல்லிக்கட்டு காளை செத்தது பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வளர்த்த ஜல்லிக்கட்டு காளை செத்தது

Update: 2021-02-26 19:27 GMT
ஆதனக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம், நெம்மேலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனுராதா. இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி வட்டம் தோகூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் 2018-ம் ஆண்டு கொம்பனை விலைக்கு வாங்கி, அதற்கு ராவணன் என பெயரிட்டு வளர்த்து வந்தார். தொடர்ந்து மதுரை மாவட்டம், அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டுகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசை தட்டிச் சென்றது. இந்நிலையில், கந்தர்வகோட்டை அருகே சோழகம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்ட ராவணன் காளை, மாடுபிடி வீரர்களை பந்தாடிவிட்டு மின்னல் வேகத்தில் சென்றதில் காளையை கொண்டு சென்ற அனுராதாவின் அண்ணன் மாரிமுத்து குழுவினரால் பிடிக்க முடியாமல் பத்துநாட்களுக்கு மேலாக தேடி வந்தனர். இந்நிலையில், தச்சங்குறிச்சி காட்டுப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளை இறந்து கிடப்பதாக, தகவல் வந்ததையடுத்து மாரிமுத்து சென்று பார்த்தபோது ராவணன் காளை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அந்த காளையை மீட்டு நெம்மேலிப்பட்டிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மாரிமுத்து குடும்பத்தினர் ராவணன் காளைக்கு மரியாதை ெசலுத்தினர். மேலும் பொதுமக்கள் காளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். காமன்வெல்த் போட்டியிலும், தெற்காசிய பழுதூக்கும் போட்டியிலும் தங்கம் வென்ற அனுராதா தற்போது ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறுவதற்காக பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள இந்திய விளையாட்டு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி எடுத்து வருகின்றார். காளை இறந்து தகவலைக்கேட்ட அனுராதா கண்ணீர் விட்டு அழுதார். காைள இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்