வருவாய்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-02-26 19:17 GMT
சிவகங்கை,

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக, வருவாய்த்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பதவி உயர்வினை உத்தரவாதப்படுத்தி ஆணை வெளியிட வேண்டும். புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 17-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 9-வது நாளான நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் செல்வக்குமார், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் கிருஷ்ணக்குமார், அசோக்குமார், பாலமுருகன், மாவட்ட இணைச் செயலாளர்கள் ராஜாமுகமது, தென்னரசு, மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்