பெண் போலீசாருக்கு ஸ்கூட்டர் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்

பெண் போலீசாருக்கு ஸ்கூட்டர்

Update: 2021-02-26 19:14 GMT
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் போலீசாருக்கு ஸ்கூட்டர் வழங்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெண் போலீசாருக்கு ஸ்கூட்டர்களை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், `பெண் போலீசாருக்கு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு  இருசக்கரவாகனம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது குற்ற நடவடிக்கைகளில் துரித நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக 20 ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவிேலயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பெண் போலீசாருக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் கீதா, ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ஹீரோ ஷோரூம் நிர்வாக இயக்குனர் ஜெயக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்