புதிய போலீ்ஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
திருவாரூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக கயல்விழி பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருவாரூர்;
திருவாரூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக கயல்விழி பொறுப்பேற்றுக்கொண்டார்.
பணியிட மாற்றம்
திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த துரை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் கயல்விழி என்பவர் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார். இவர் சென்னையில் மகளிர் மற்றும் குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்துள்ளார்.
பதவி ஏற்பு
இந்நிலையில் நேற்று திருவாரூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக கயல்விழி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.