சின்னசேலத்தில் திருநங்கைகளுக்கு ரூ.11 லட்சம் கடன் உதவி
சின்னசேலத்தில் திருநங்கைகளுக்கு ரூ.11 லட்சம் கடன் உதவி;
சின்னசேலம்
சின்னசேலம் கிராமத்தின் ஒளி மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி சார்பில் திருநங்கைகளுக்கு சிறுதொழில் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு கிராமத்தின் ஒளி நிர்வாக இயக்குனர் சக்திகிரி தலைமை தாங்கினார்.த மிழ்நாடு கிராம வங்கியின் சின்ன சேலம் கிளை மேலாளர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். கிராமத்தின் ஒளி இயக்குனர் மேகலா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழ்நாடு கிராம வங்கியின் வட்டார மேலாளர் ரவிச்சந்திரன், கள்ளக்குறிச்சி கிளை மேலாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் தமிழ்நாடு கிராம வங்கியின் சார்பில் சிறு தொழில் கடன் உதவியாக 5 கூட்டுப்பொறுப்பு குழுவைச் சேர்ந்த 22 திருநங்கைகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.11 லட்சம் மற்றும் அம்மையகரம், எலவடி, பூசப்பாடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 99 கூட்டுப்பொறுப்பு குழு மகளிர்களுக்கு ரூ.1 கோடியே 81 லட்சம் கடன் உதவி வழங்கினர். இதில் வங்கி ஊழியர்கள், கிராமத்தின் ஒளி பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருநங்கை இளையராணி நன்றி கூறினார்.