கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-02-26 17:46 GMT
சாயல்குடி, 
கடலாடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிராம உதவியா ளர்கள் சங்க மாநில செயலாளர் ராமநாதன் தலைமை தாங்கினார். வட்ட துணைத் தலைவர் வில்வலிங்கம், வட்ட பொருளாளர் அழகு பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.  ஆர்ப்பாட்டத்தில் கிராம உதவியாளர்கள் கோபால், முனியசாமி, திருப்பதி லட்சுமிகாந்தன் உள்பட கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்