லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி, பிப்:
டீசல், சுங்க கட்டணம் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து, கோவில்பட்டியில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பயணியர் விடுதி முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் செயலாளர்கள் கணேஷ்குமார், கிருஷ்ணசாமி, கண்ணன், பொருளாளர் நாராயணசாமி, துணைத் தலைவர்கள் முருகேசன் மற்றும் நல்லதம்பி, சங்க ஆலோசகர் மருது செண்பகராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் முழங்கினர்.