முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-02-26 17:29 GMT
கள்ளக்குறிச்சி

மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில இணைச்செயலாளர் மணியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சங்கர், செயலாளர் முருகன், பொருளாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மருத்துவர் சமூக மக்களுக்கு 5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், கொத்தடிமை மற்றும் வன்கொடுமை பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் ஆகிய கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகர அவைத்தலைவர் ராமசாமி, ஒன்றிய அவைத்தலைவர் கருப்பையா, நகர தலைவர் கோவிந்தன், செயலாளர் பாலமுருகன், பொருளாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்