போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்;
கமுதி,
கமுதி-கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பொன் ஆறுமுகம் என்பவரின் மகன் கோகுல் (வயது28). இவர் 16 வயது சிறுமியை திருமணம் செய்து வைக்குமாறு சிறுமியின் பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதற்கு சிறுமியின் பெற்றோர் மறுத்து வந்ததால், சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ய முயற்சித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் தட்டிக்கேட்டபோது வாலிபர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கமுதி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகபாய், வழக்குப்பதிவு செய்து கோகுலை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.