சேலத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.828 ஆக நிர்ணயம்

சேலத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.828 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-02-25 22:07 GMT
சேலம்:
பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை தொடர்ந்து வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலையும் உயர்ந்து வருகிறது. சமீபகாலமாக மாதத்திற்கு 2 முறை சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு வந்த நிலையில் இந்த மாதம் முதன் முறையாக 3-வது தடவையாக மீண்டும் உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. சேலத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை கடந்த வாரம் ரூ.803 ஆக இருந்த நிலையில் நேற்று ரூ.25 அதிகரித்து ரூ.828 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் சிலிண்டர் ரூ.100 வரை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்