திருச்சி,
திருச்சி-தஞ்சை ரோட்டில் வரகனேரி, உடையான்குளத்தில் உள்ள கமலாம்பிகை உடனுறை கைலாசநாத சுவாமி கோவிலில் மாசிமக திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில் 22-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. ஒரு தேரில் சோமஸ்கந்தர் பிரியாவிடையுடனும், மற்றொரு தேரில் கமலாம்பிகையும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம்பிடித்து இழுத்தனர்.