செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-02-25 22:04 GMT
திருச்சி அரியமங்கலத்தில்
செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; 
பள்ளியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பொன்மலைப்பட்டி, பிப்.26-
திருச்சி உள்அரியமங்கலம் அடைக்கலமாதா கோவில் தெருவில் இயங்கிவரும் கிறிஸ்தவ ஆர்.சி.பள்ளி மைதானத்தில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்க இருப்பதாக ஊர் பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஊர் பொதுமக்கள் சார்பில் புதிய செல்போன் கோபுரம் அமைத்தால் உடல் ரீதியாக பாதிப்பு நிறைய வரும் என்று பள்ளி முதல்வரிடம் மனு அளித்திருந்தனர். அதையும் மீறி நேற்று பள்ளியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தது. இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு பணிகளை தடுத்தி நிறுத்தினர். பின்னர் அரியமங்கலம் போலீசார் ஊர் மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பின்னர் ஊர் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்