திருச்சி விமான நிலையத்தில் காசநோய் தடுப்பு கருத்தரங்கு

திருச்சி விமான நிலையத்தில் காசநோய் தடுப்பு கருத்தரங்கு

Update: 2021-02-25 22:04 GMT
செம்பட்டு, 
திருச்சி மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவின் சார்பில் திருச்சி விமான நிலைய ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் காசநோய் தடுப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்துக்கு விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் தலைமைதாங்கினார். காசநோய் தடுப்பு துணை இயக்குனர் சாவித்திரி, காசநோய் தடுப்பு மருத்துவர் கார்த்திகேயன் ஆகியோர் காசநோய் குறித்த விளக்கங்களை அளித்தனர். இதில் துணை பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், வான்வழி போக்குவரத்து அதிகாரி லல்லு மற்றும் அதிகாரிகள், விமான நிலைய அனைத்து ஊழியர் சங்க தலைவர் யுவ ராஜேஷ், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஸ்ரீதீப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்