கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் தாலுகாவில் உள்ள வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர், காலமுறை ஊதியம் கேட்டு உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் கணபதி கோரிக்கைகளை விளக்கி பேசினார். முன்னதாக வட்ட தலைவர் மதியழகன் வரவேற்றார். இறுதியில் மாநில செயற்குழு உறுப்பினர் சுகுணா நன்றி கூறினார். இதில் அனைத்து கிராம உதவியாளர்களும் திரளாக கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.