தென்காசியில் 11 பேருக்கு கொரோனா தொற்று

தென்காசியில் 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-02-25 20:58 GMT
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்தில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில்  சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 331பேர் வீடு திரும்பி உள்ளனர். 42 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 159 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்