காரியாபட்டி
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் சார்பில் மாவட்டம் தோறும் மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. காரியாபட்டி பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் பானுமதி தலைமை தாங்கினார். சென்னை பரதாலயா குழுவினர் மதுவினால் ஏற்படும் தீமைகள் பற்றி கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், காரியாபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.