சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்
சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
சிவகாசி
சிவகாசி அருகே வி.சொக்கலிங்காபுரத்தில் இயங்கி வரும் பட்டாசு ஆலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு திடீரென வெடி விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பட்டாசு ஆலையில் ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அங்கு தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து கொண்டிருப்பதால் தீயணைப்புத்துறையினர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.