வைகை ஆற்றில் பிணமாக மீட்பு

வைகை ஆற்றில் பிணமாக மீட்பு;

Update: 2021-02-25 20:18 GMT
மதுரை,பிப்
மதுரை மதிச்சியம் பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 29). சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து மதிச்சியம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை தேடி வந்தனர்.
இந்த நிலையில் மதிச்சியம் அருகே வைகை ஆற்றில் நாகராஜ் பிணமாக மிதந்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 
மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்