கன்னியாகுமரி கடலில் போலீசார் தீவிர கண்காணிப்பு

கன்னியாகுமரி கடலில் போலீசார் தீவிர கண்காணிப்பு

Update: 2021-02-25 19:50 GMT
கன்னியாகுமரி, 
பிரதமர் மோடி கோவை மற்றும் புதுச்சேரிக்கு வந்ததையொட்டி குமரி மாவட்ட கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நம்பியார், சுடலைமணி, நாகராஜன், சுரேஷ் மற்றும் போலீசார் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள் சின்னமுட்டம் முதல் கூடங்குளம் வரையில் ஒரு படகிலும் கன்னியாகுமரி முதல் நீரோடி வரையில் மற்றொரு படகிலும் ரோந்து சென்றனர். கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனத்திலும் கடற்கரை பகுதிகளில் சுற்றி வந்தனர்.  
 இது தவிர குமரி மாவட்டத்தில் 48 கடற்கரை கிராமங்களிலும், கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான 9 சோதனை சாவடிகளிலும் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை தொடங்கிய இந்த கண்காணிப்பு பணி இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை நடக்கிறது.

மேலும் செய்திகள்