லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2021-02-25 19:39 GMT
வடகாடு
வடகாடு அருகே உள்ள நெடுவாசல் மேல்பாதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 27). இவர் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக, நெடுவாசலில் இருந்து பேராவூரணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு அங்கிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆவணம் கைகாட்டி அருகே வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்புறம் எதிர்பாராத வகையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக திருக்கோர்ணம் அருகே உள்ள குன்னவயலை சேர்ந்த தேவதாஸ் (28) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்