கியாஸ் விலை உயர்வை கண்டித்து களக்காட்டில் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கியாஸ் விலை உயர்வை கண்டித்து களக்காட்டில் பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காட்டில் சமையல் கியாஸ் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விமன்ஸ் இந்தியா மூமெண்ட் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மெஹராஜ் பேகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பீர்பாத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விமன்ஸ் இந்தியா மூமெண்ட் அமைப்பின் நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் நூஸ்ரத், ஜன்னத் பரிஷனா உள்பட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
முடிவில், ஷாஜிதா நன்றி கூறினார்.