திருங்குறுங்குடியில் பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருக்குறுங்குடியில் பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2021-02-25 19:33 GMT
ஏர்வாடி:

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 51). பனையேறும் தொழிலாளி. இவருடைய மனைவி அன்னசுதா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். 

பாஸ்கர் சம்பவத்தன்று அங்குள்ள கொடுமுடியாறு அணைக்கு செல்லும் வழியில் தனது தோட்டத்தில் உள்ள பனை மரத்தில் பதனீர் இறக்குவதற்காக ஏறினார்.

அப்போது பாஸ்கர் எதிர்பாராதவிதமாக பனைமரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்