வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 4 பேர் கைது

அண்ணாமலைநகரில் கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-25 19:28 GMT
அண்ணாமலநைகர், 

 சிதம்பரம் அண்ணாமலைநகரை சேர்ந்தவர் முத்து (வயது 28). இவர் தனது நண்பர் ஒருவரை பார்ப்பதற்காக திடல்மேடு பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வடக்கிருப்பு சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்த 4 பேர் முத்துவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 650 ரூபாையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்து முத்து அண்ணாமலைநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

போலீசார் விசாரணை

விசாரணையில் முத்துவை மிரட்டி பணத்தை பறித்து சென்றது அண்ணாமலை நகர் வடக்கிருப்பு பகுதியை சேர்ந்த சாமிநாதன் (34), மண்ரோடு ஏழுமலை (33), திருவாரூர் மாவட்டம் திருமீச்சூர் பாடலீஸ்வரன் (42), அண்ணாமலை நகர்  கலைவாணன் (33) ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து சாமிநாதன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்