நெல்லை வண்ணார்பேட்டையில் டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தோடு தர்ணா போராட்டம்

நெல்லை வண்ணார்பேட்டையில் டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-25 19:20 GMT
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்தோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தர்ணா போராட்டம்

நெல்லை, தென்காசி மாவட்ட டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் நெல்லை வண்ணார்பேட்டையில் குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

செயலாளர் சரவணபெருமாள் தலைமை தாங்கினார். தொ.மு.ச. டாஸ்மாக் சங்க துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கூட்டுக் குழு தலைவர் சந்திரன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

டாஸ்மாக் ஊழியர்களின் பணிவரன்முறை, காலமுறை ஊதியம், பணியிட பாதுகாப்பு, சுழற்சிமுறையில் பணியிடமாறுதல் விற்பனை நேரம் குறைப்பு உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

கோஷம்

போராட்டத்தில் தொ.மு.ச.பொதுச்செயலாளர் தர்மன், சி.ஐ.டி.யு. மாநில துணைத் தலைவர் செண்பகம், மாவட்ட செயலாளர் மோகன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சடையப்பன், சி.ஐ.டி.யு. டாஸ்மாக் மாநில குழு உறுப்பினர் சிவன்ராஜ், ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயற்குழு உறுப்பினர் சாஸ்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் சி.ஐ.டி.யு. பொருளாளர் இளமுருகு நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்