நெல்லையில் அங்கன்வாடி பணியாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

நெல்லையில் அங்கன்வாடி பணியாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-25 19:17 GMT
நெல்லை:
நெல்லையில் அங்கன்வாடி பணியாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

பணிகொடையாக பணியாளர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் கடந்த 22-ந் தேதி முதல் நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

4-வது நாள்

4-வது நாளாக அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஞானம்மாள் தலைமை தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

மேலும் செய்திகள்