தொழில் நஷ்டம் காரணமாக ரிக் வண்டி உரிமையாளர் தற்கொலை

ரிக் வண்டி உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டார்

Update: 2021-02-25 19:17 GMT
எலச்சிப்பாளையம்:
திருச்செங்கோடு அருகே உள்ள தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 47). ரிக் வண்டி வைத்து தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக இவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. மேலும் பலரிடம் கடன் பெற்றதாகவும் கூறப்படுகிறது. தொழில் நஷ்டம் மற்றும் கடன் தொல்லை அதிகரித்ததால் தனபால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார். 
இந்தநிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த இவருடைய மனைவி தமிழரசி திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தனபால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்