சாக்கடையில் இறந்து கிடந்த 5 மாத சிசு போலீசார் விசாரணை
திருப்பூரில் சாக்கடையில் இறந்து கிடந்த 5 மாத சிசு போலீசார் விசாரணை
அனுப்பர்பாளையம் :
திருப்பூர் பி.என்.ரோடு பாண்டியன்நகர் பகுதியில் உள்ள ஒரு சாக்கடை கால்வாயில் 5 மாத சிசு ஒன்று கிடப்பதாக திருமுருகன்பூண்டி போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், அந்த சிசுவை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லுமாறு அருகில் இருந்த தனியார் ஆம்புலன்சு டிரைவரிடம் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்சு டிரைவர் எடுத்து செல்ல மறுத்து விட்டார். இதையடுத்து போலீசார் மோட்டார்சைக்கிளில் அந்த சிசுவின் பிரேதத்தை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
குறைமாதத்தில் பிறந்ததால் சாக்கடை கால்வாயில் அந்த குழந்தை வீசப்பட்டாதா? அல்லது வேறு காரணமா? என்றும், அதை வீசிச்சென்றவர் யார்? என்பது குறித்தும் திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.