நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு 440 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து, 440 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-02-25 19:05 GMT
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து, 440 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை 430 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 440 காசுகளாக உயர்ந்தது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:-
சென்னை-455, ஐதராபாத்-415, விஜயவாடா-412, மைசூரு-453, மும்பை-460, பெங்களூரு-450, கொல்கத்தா-457, டெல்லி-417.
கறிக்கோழி
கறிக்கோழி கிலோ ரூ.79-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.42-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் முட்டையின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்